லண்டனில் ஈழத்தமிழர் மீது முகமூடி அணிந்து கடுமையான தாக்குதல்!

லண்டனில் ஈழத்தமிழர் மீது முகமூடி அணிந்து கடுமையான தாக்குதல்! (காணொளி)

<iframe width="420" height="315" src="//www.youtube.com/embed/P3JVKAwvor0" frameborder="0" allowfullscreen></iframe>


லண்டன் நகரின் அமைந்துள்ள கடையொன்றில் புகுந்த முகமூடி அணிந்த கொள்ளையர்கள் இலங்கைத் தமிழர் ஒருவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

லிவர்பூல் பிரதேசத்தின் லித்தர்லேண்ட் என்ற பகுதியில் அமைந்துள்ள கடையொன்றுக்குள் புகுந்த முகமூடி அணிந்த கொள்ளையர்கள், கடை ஊழியரான மில்டன் தர்மலிங்கம் என்ற தமிழர் மீதே தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் நடந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
தமிழரான கனகசபை சிறிதரன் என்பவருக்கு சொந்தமான கடைக்குள் இரண்டு முகமூடி அணிந்த கொள்ளையர்கள் பாரிய இரும்பு சங்கிலியுடன் புகுந்துள்ளனர்.

கடைக்குள் புகுந்த கொள்ளையர்களைத் தடுத்த மில்டனை பாரிய இரும்பு சங்கிலியால் தாக்கியுள்ளனர். இதனால் அவரது முகத்திலும் தலையிடும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

கடைக்குள் புகுந்த கொள்ளையர்களை தடுக்க அவர்களுடன் ஆயுதங்கள் இன்றி மில்டன் தர்மலிங்கம் சண்டையிட்டுள்ளார்.

கடையில் இருந்த பாதுகாப்பு கெமராக்களில் அவர் கொள்ளையர்களுடன் சண்டையிடும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

இத்தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த தர்மலிங்கம், கடைக்கு வந்திருந்த வாடிக்கையாளர்களின் உதவியுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவரது தலையில்10 தையல்கள் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

000000000000000000000000000

நாங்கள் இன்னும் கொழுந்து பறித்துக் கொண்டு தான் இருக்கிறோம் - எம்.சின்னையா

மலையக தமிழ் தேசிய முன்னணியில் போட்டியிடும் பிரஜைகள் முன்னணி வேட்பாளர்களிக்கு ஆதரவு தெரிவிக்கும் பிரசாரக் கூட்டமொன்று நுவரெலியா கந்தபொல பகுதியில் நடைபெற்றது.

இம்முறை மத்திய மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் எம்.சின்னையா அங்கு கருத்து வெளியிட்டார்

இந்த சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை காணொளியில் காண்க.

எம் சின்னையா
"நூற்றாண்டு காலமாக  அதாவது 150 வருட காலமாக மலையகத்திலே நாங்கள் இன்னும் கொழுந்து பறித்துக் கொண்டு தான் இருக்கிறோம். காரணம் என்னவென்றால் தேர்தல் வருகின்ற காலத்திலே கிட்டத்தட்ட 50 அல்லது நூறு வாகனங்களில் வருவார்கள். இது யாருடைய பணம் மக்களின் அதாவது உங்களின் சந்தாப் பணம். சில பெரிய கட்சிகள் ஒரு கோடியே 48 இலட்சம் உங்களின் பணத்தை வைத்தக் கொண்டு சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நாம் இன்னும் இந்த லயத்திலே தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்"
 எஸ்.மணி
"பெரிய வசதி, வாய்ப்பு, பெரிய அரசியல் கூட்டம் என்பதெல்லாம் எங்களுக்கு தெரியாது. நாங்கள் தோட்டத் தொழிலாளிகளின் பிள்ளைகள். தோட்டத் தொழிலாளிகளின் பிள்ளைகளை மாகாண சபைக்கு அனுப்புகின்ற ஒரே ஒரு உறுப்பினர் ஜே ஸ்ரீ ரங்கா மாத்திரம் தான். கஷ்டம் நஷ்டம் லயத்தில் பிறந்து வளர்ந்த எங்களுக்கு அதெல்லாம் தெரியும். உங்களோடு கஷ்டப்பட்டவர்கள். இன்றைக்கு வருவார்கள் பைலட் பிரேம்நாத் போல, நான் உங்கள் தோழன் என்று கூறுவார்கள். என்னென்னமோ கதைப்பார்கள். ஆனால் எதுவுமே தெரியாது. ஊருக்கும் எதுவுமே செய்யவில்லை. கந்தபொலயில் மாகாண சபை உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்ன செய்திருக்கிறார்கள்"

 எஸ்.பிரபா

"இம்முறை நாங்கள் தமிழ், முஸ்லிம் மக்கள் என்றில்லாமல் தமிழ் பேசும் மக்களாக ஒன்றிணைந்து பிரஜைகள் முன்னணி சார்பில் வேட்பாளர்களாக உங்கள் முன் களமிறங்கியிருக்கிறோம். அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் இம்முறை சிறுபான்மை மக்களுக்கு பாரிய அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளது. பிரஜைகள் முன்னணி சார்பில் எமது தலைவர் வெறுமனே வாக்குறுதிகள் கூறமாட்டார் இதற்கு முன்பும் பாதைபு புனரமைப்பு கலாச்சார மண்டபம் என்று உங்களுக்கு செய்து தந்திருக்கிறார். எனவே உங்களிடம் வெறுமனே வாக்குறுதிகள் கூறவில்லை"


You may also like
பிரஜைகள் முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம்
சர்வதேச அழுத்தங்கள் காரணமாகவே வட மாகாண சபைத் தேர்தல் - சித்தார்த்தன்
குழந்தை தான் முக்கியம் - ஐஸ்வர்யா ராய்
மாகாண சபைத் தேர்தலில் வென்றுகாட்டுமாறு நாம் சவால் விடுக்கின்றோம் - ஷாந்த பண்டார
துப்பாக்கி பிரயோகம் ரத்துபஸ்வல மீதல்ல உங்கள் மீதே - கே. டீ லால்காந்த
வட மாகாண தமிழ் இலக்கியப் பெருவிழா, நிறைவு நாள் இன்று
தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தீர்மானிக்கப்படவில்லை - இரா.சம்பந்தன்
அரச நிர்வாக சேவையில் தொழிலாளர்களின் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் - ஜே. ஸ்ரீ ரங்கா