இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த என்.ஸ்ரீநிவாசன் போட்டியின்றி மீண்டும் தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.
எனினும் அவர் பதவியேற்றுக் கொள்வதற்கு இந்திய உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
இந்த ஆண்டு இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் இடம்பெற்ற முறைகேடுகளில், ஸ்ரீநிவாசனின் மருமகனான குருநாத் மெய்யப்பனுக்கு தொடர்பு உள்ளது என்று காவல்துறையினர் குற்றஞ்சாட்டி அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக உள்ளக விசாரணைக்கு ஏற்பாடு செய்த கிரிக்கெட் வாரியத்தின் குழு, ஸ்ரீநிவாசன் மற்றும் அவரது மருமகன் மீது தவறுகள் இல்லை எனக் கூறி முடிவெடுத்திருந்தது.
அந்தக் குழு அமைக்கப்பட்ட விதம் மற்றும் அதன் அறிக்கை ஆகியவற்றை எதிர்த்து பிஹார் கிரிக்கெட் சங்கம் உச்சநீதிமன்றத்தை அணுகி, சென்னையில் நடைபெற்ற கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தது.