பவர்ஸ்டாரை வெச்சி படம் எடுக்கிறதும் தற்கொலை செஞ்சிக்கிறதும் ஒண்ணுதான்!!!.

பவர்ஸ்டாரை வெச்சி படம் எடுக்கிறதும் தற்கொலை செஞ்சிக்கிறதும் ஒண்ணுதான்! பீதியை’ கிளப்பும் பிரபல டைரக்டர்!
எவ்ளோ அடிச்சாலும் இந்த மனுஷன் தாங்குறாரே…? என்ற எண்ண வைப்பவர் தான் பவர்ஸ்டார். அவரை எத்தனை பேர் கேலி. கிண்டல், நக்கல் அடித்தாலும் அவற்றையெல்லாம் இன்முகத்துடன் ஏற்றுக்கொள்கிறார்.

பாஸிட்டீவ் அப்ரோச் என்பது போய் அவருடைய இந்த நெகட்டீவ் அப்ரோச்சே அவருக்கு தமிழ்சினிமாவில் ஒரு கெட்டியான இடத்தை கொடுத்து விட்டது. அதன்விளைவு இப்படித்தான் தமிழ்சினிமா இருக்க வேண்டும் என்ற எந்த வரையறையும் இல்லாமல் போய் விட்டது.

அவரை டம்மி பீஸ் ரேஞ்சில் சீன்களை வைத்து காமெடி செய்வது என்பதே அவருக்கு சில பட வாய்ப்புகள் தேடி வரும் அளவுக்கு அவரை கொண்டு சென்று விட்டது.

நிலமை இப்படி இருக்க, பவர் ஸ்டாரை வைத்து படம் எடுக்கும் சூழ்நிலை வந்தால் நான் தற்கொலை செய்து கொள்வேன் அவரை வெச்சி படம் எடுக்கிறதே கிட்டத்தட்ட அந்த மாதிரி தான் என்று சொல்லி புதிதாக பீதியை கிளப்பியிருக்கிறார் ஒரு புதுமுக டைரக்டர்.

அட அவர் வேறு யாருமல்ல… ‘தமிழ்ப்படம்’ என்ற ஃபுல் லென்த் காமெடிப்படம் எடுத்தாரே அதே அமுதன் தான். அவர் தற்போது விமலை வைத்து ‘ரெண்டாவது படம்’ என்ற படத்தை டைரக்ட் செய்து வருகிறார்.

சமீபகால பட்ஜெட் காமெடிப்படங்களில் பவர்ஸ்டாரும் ஒரு கேரக்டராக வருகிறார். சி.எஸ்.அமுதனும் அந்த வகையறாப் படத்தை தான் எடுத்து வருகிறார்.

அப்படிப்பட்ட அவரிடம் பவர் ஸ்டார் உங்களை கடத்திச் சென்று வைத்துக் கொண்டு என்னை வைத்து ஒரு படம் டைரக்ட் செய்யுங்கள்? என்று மிரட்டினால் என்ன செய்வீர்கள்? என்று ஒரு வாரப் பத்திரிகையின் சார்பில் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அமுதன் “ அவரை வைத்து படம் எடுப்பதும் தற்கொலை செய்து கொள்வதும் ஒன்றுதான். எனக்கு வேறு வழியே இல்லை, நான் அதைத்தான் செய்வேன் என்று சொல்லி பீதியைக் கிளப்பியிருக்கிறார்.

இருந்தாலும் பவரு மேல உங்களுக்கு இவ்ளோ கடுப்பெல்லாம் இருக்கக்கூடாது அமுதன் சார்…