என் மனைவிக்கு வேறு ஒருவனுடன் தொடர்பு இருக்கிறது -குமுறிய ஹீரோ!

என் மனைவிக்கு வேறு ஒருவனுடன் தொடர்பு இருக்கிறது -குமுறிய ஹீரோ! – உன்னோடு ஒரு நாள் விமர்சனம்

தன் மனைவிக்கு வேறு ஒருவனுடன் தொடர்பு இருக்கிறது என்பது ஒரு கணவன் அவளை பின் தொடர்ந்து ஒருநாள் கண்டுபிடித்தால் என்னவாகும்…? அந்த கள்ளக் காதல், குடும்ப வாழ்க்கையை எப்படியெல்லாம் சின்னாபின்னமாக்கும்… இதற்கு பதில் சொல்கிறது இன்று வெளியாகியிருக்கும் உன்னோடு ஒருநாள் படம்.
இன்று மூடர்கூடம், மத்தாப்பூ மற்றும் உன்னோடு ஒருநாள் ஆகிய மூன்று நேரடி தமிழ் படங்கள் ரிலீசாகியிருக்கின்றன. இவற்றில் மூடர்கூடம் அதிகமாக விளம்பரம் செய்யப்பட்டு ரிலீசாகிறது. மத்தாப்பூ ஓரளவு பப்ளிசிட்டி செய்திருக்கிறார்கள். உன்னோடு ஒரு நாள் படம் மட்டுமே சாதாரணமான விளம்பரத்துடன் களம் இறங்கியிருக்கிறது.

ஒரே நாளில் நடக்கும் கதைதான். ஹீரோ ஒரு ஓட்டல் அறையில் ரூம் எடுத்து தங்குகிறார். தனது நண்பனுக்கு போனைப் போட்டு தன் மனைவிக்கு வேறு ஒருவனுடன் தொடர்பு இருக்கிறது… நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்… என்று சொல்கிறார். அப்படியெல்லாம் இருக்காதுடா… அவ ரொம்ப நல்ல பெண்ணாச்சே… நீ தற்கொலை ஏதும் பண்ணிக்காதே… என்று அட்வைஸ் செய்கிறான் நண்பன். ஹீரோவின் மனைவிக்கு கள்ளக்காதல் வரக் காரணம் என்ன? குமுறிய ஹீரோ எடுத்த முடிவு என்ன என்பது மீதி கதை.
படத்தில் நடித்திருக்கும் புதுமுக ஹீரோ நல்லாவே நடிச்சிருக்காரு. இவருடைய கண்கள் இவருக்கு ப்ளஸ். இவருக்கு நண்பனாக வருபவரை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறது. கதாநாயகியாக வருபவர் நீலம். தமிழ் தெலுங்கில் வேறு சில படங்களில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் துரை கார்த்திகேயன். ரொமான்டிக் சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். படத்தில் அடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கிறது. இயக்குநர் துரை கார்த்திகேயன் சமீபத்தில் நடந்த விபத்து ஒன்றில் உயிரிழந்து விட்டாராம். அதனால், இயக்குநரின் நினைவாக படத்தை தாமதிக்காமல் ரிலீஸ் செய்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தப் படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.