குழந்தைக்கு பதிலாக பாம்பை வயிற்றில் சுமக்கும் பெண் (Photos)

தென் ஆபிரிக்காவைச் சோந்த பெண்ணொருவர் தான் கர்ப்பம் தரித்திருப்பதாக நம்பியிருந்த நிலையில் அவரது வயிற்றில் குழந்தைக்கு பதில் பாம்பு இருப்பதனை வைத்தியர்கள் கண்டறிந்துள்ளனர். தென் ஆபிரிக்காவின் கிழக்கு ஜொஹன்னஸ்பேர்க்கின் வொஸ்லூரஸ் எனுமிடத்தைச் சேர்ந்த மரியா சொடெட்ஸி என்ற 49 வயதான பெண்ணின் வயிற்றிலேயே இவ்வாறு பாம்பு வளர்கிறது.  வயிறு பெரிதாகிய  பின்னர் மரியா அடிக்கடி நோய்வாய்ப்பட வைத்தியரை நாடியுள்ளார். பின்னர் இவரின் நோய்க்கு காரணமாக பாம்பு இருக்கும் என நம்புவதாகவும் இதற்கு அறுவை சிகிச்சையொன்று மேற்கொள்ள வேண்டுமெனவும் கூறியுள்ளனர்.

மரியா வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் சிகிச்சை மேற்கொள்ள முடியவில்லை. இதனையடுத்து மதகுருவிடம் சிகிச்சைக்காக மரியாவின் காதலன் அழைத்துச் சென்றுள்ளார் இது குறித்து மரியா கூறுகையில், மதகுரு எனது ஆடைகளைக் அவிழ்த்து வெள்ளை மற்றும் ப்ரௌவ்ன் நிற பாம்புத் தோலினால் மூடப்பட்ட ‘முதி” எனும் ஒரு நாட்டு மருந்தினை வழங்கினார் இது என்னை குணப்படுத்தும் என மதகுரு கூறினார். ஆனால் தொடர்ந்து சில நாட்களின் பின்னர் எனது பற்கள் அனைத்து விழுந்துவிட்டன.


இதேவேளை மதகுருவை தொடர்பு கொண்ட பின்னர் மரியாவின் காதலனும் காணாமல் போய்விட்டார். இவர் இல்லாமல் பாம்பை நீக்க முடியாது.  இவை அனைத்திற்கும் மதகுருவே காரணம் என்கிறார் மரியா. இது போன்ற செயற்பாடுகள் பொறாமையான காதலர்களால் மேற்கொள்ளப்படும் என பாரம்பரிய மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.