கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சீ.வி விக்னேஸ்வரனை நாகரீகமான அரசியலின் நிமித்தம் ஒரே மேடையில் விவாதிக்க ஈ.பி.டி.பியின் சார்பில் ஐ.ம.சுமுன்னணியின் முதன்மை வேட்பாளர் சி.தவராசா அவர்கள் அழைப்பு விடுத்திருந்தார்.
அவ் அழைப்புத் தொடர்பில் அண்மையில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்த கூட்டமைப்பு பேச்சாளரின் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில் சி.தவராசா அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதன் விபரம் வருமாறு :-
ஆம்! எனக்கு அவர்களின் தரத்திற்கு அரசியல் யோக்கியதை இல்லை என்று ஏற்றுக் கொள்கின்றேன். நான் அசோக் ஹொட்டலில் இருந்து மண்டயன் குழுவிற்கு தலைமை தாங்கி இளைஞர்களையும் யுவதிகளையும் கொலை செய்வித்து வீதி வீதியாக ரயர் போட்டு எரிக்கவில்லை, யாருடைய தாலிகளும் பறிக்கப்பட காரணமாக இருக்கவில்லை, எந்தத் தாயினுடைய கண்ணீருக்கு காரணமாக இருக்கவில்லை. ஆகவேதான் அவர்களின் தரத்திற்;கு எனக்கு யோக்கியதை இல்லை என்று கூறுகிறேன்.
நான் கடந்த வார இறுதி தினக்குரலிற்கு அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டு இருந்தேன் விக்னேஸ்வரன் ஐயா ஒரு குடம் வி~த்தில் ஒரு துளி பால் என்று. அது சரி என்று இவரின் கூற்று நிரூபிக்கிறது.
அவர் கிமிக் என்று ஒரு வாhத்தையை பயன்படுத்தி இருந்தார். அவர் தனக்கு பொருத்தமான ஒரு சொல்லையே பாவித்திருக்கிறார். அத்தகையை மாயாஜாலா அரசியல் செய்யாமல் விக்னேஸ்வரன் ஐயா அவர்களை நாகரீக அரசியல் மேடைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தேன். விக்னேஸ்வரன் ஐயாவை தவிர கூட்டமைப்பு வேட்பாளர்கள் எவருக்கும் என்னுடன் ஒரே மேடையில் பேசுவதற்கு அருகதையும் இல்லை, அதற்கு நான் தயாரும் இல்லை.
நான் கட்சிக்கு பயந்து வெளிநாடு சென்றதாக கூறப்பட்டது. புலிகளால் எனக்கு இருந்த கொலை அச்சுறுத்தல் காரணமாகவும், எனது மருத்துவ தேவைகளுக்காகவுமே வெளிநாடு செல்ல முடிவு செய்தேனே தவிர இவர்களைப் போல் தலைவர்களை காட்டிக் கொடுத்தோ பதவிகளுக்காக காலில் விழுந்து சரணாகதி அடையும் அரசியலோ நான் செய்யவில்லை.