சமீப காலமாக ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டும் என ஹீரோயின்களுக்கு ஆசை வந்துவிட்டது. ஹீரோக்களே இப்போது ஆக்ஷன் படங்களில் குறைத்துவிட்டு காமெடி , காதல் சப்ஜெக்ட் என்று தேர்ந்தெடுத்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஹீரோயின்களுக்கு இந்த ஆசை எப்படி வந்தது என்றே தெரியவில்லை.
சமீபத்தில் ரிலீஸான தலைவா படத்தில் அமலாபால் போலீஸ் வந்து வந்து மிரட்டியிருப்பார். (?) தற்போது அனுஷ்கா, பிரியாமணி போன்ற நடிகைகளும் ஆக்ஷன் படங்களில் நடித்து வருகிறார்கள். இந்த வரிசையில் தற்போது புதியதாக ஆக்ஷன் களத்தில் இறங்கியிருப்பவர் நம்ம காஜல் அகர்வால்தான்.
‘துப்பாக்கி படத்துக்கு பிறகு விஜய் ஜோடியாக ‘ஜில்லா படத்தில் நடிக்கிறார் காஜல் அகர்வால். இதில் அவர் போலீஸ் அதிகாரி வேடம் ஏற்கிறார். சமீபத்தில் அவர் நடித்த விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டன.
போலீஸ் யூனிபார்ம் அணிந்து முரடர்களுடன் மோதினார். அப்போது ஒரு ஸ்டண்ட் நடிகர் உண்மையிலேயே காஜல் அகர்வாலை அடித்துவிட்டதால் சிறிதுநேரம் படப்பிடிப்பில் பரபரப்பு ஏற்பட்டது. அவர் உடனடியாக காஜலிடம் மன்னிப்பு கேட்டதால் பிரச்சனை பெரிதாகாமல் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்தது.
இது பற்றி காஜல் கூறும்போது, ‘ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. இது இப்படத்தில் நிறைவேறுகிறது.
போலீஸ் வேடம் பொருந்துமா என்ற சந்தேகம் இருந்தது. அதற்கான யூனிபார்ம் அணிந்தபோது எனக்கு வேடம் மிகப்பொருத்தமாக இருப்பதாக இயக்குனர் என்னை பாராட்டினார். ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கும்போது சிறிது பயமாகத்தான் இருக்கிறது.