நடிகை டாப்ஸியின் திடீர் மனமாற்றத்திற்கு காரணம் என்ன..? - புரியாமல் குழம்பிய டப்பிங் குழுவினர்.
பிரபல ஹாலிவுட் நடிகை கேதி சாகப் நடித்த ரிட்டிக் என்ற படத்திற்கு டப்பிங் பேசுவதற்காக ஒப்புக்கொண்டு அட்வான்ஸ் தொகையையும் வாங்கிவிட்டு பின்னர் டப்பிங் தியேட்டருக்கு வராமல் இழுத்தடித்து கொண்டிருப்பதாக நடிகை டாப்ஸி மீது புகார் எழுந்துள்ளது.
ஹாலிவுட் நடிகைக்கு டப்பிங் பேச பணம் வாங்கிய டாப்சி, பின்னர் தனது தோழிகளின் ஆலோசனைப்படி திடீரென டப்பிங் பேச முடியாது என மறுத்துவருகிறார். வாங்கிய அட்வான்ஸ் பணத்தையும் திருப்பித்தராமல் இழுத்தடித்து வருகிறார். எனவே டப்பிங் குழுவினர் கடும் எரிச்சலில் உள்ளனர்.
டப்பிங் பேசினால் தன்னை வாய்ப்பு இல்லாத நடிகை என கோடம்பாக்கம் ஒதுக்கிவிடும் என அவருடைய தோழிகள் கொடுத்த ஆலோசனையால்தான் திடிரென அவர் டப்பிங் கொடுக்க மறுத்துவருவதாக கூறப்படுகிறது.
இதுபற்றி பட குழுவினர் தரப்பில் கேட்டபோது, ‘டாப்ஸியிடம் பேசியபோது டப்பிங் பேசுவதற்கு மறுப்பு எதுவும் சொல்லவில்லை. அவருடன் சரியான தகவல் பரிமாற்றம் இல்லாததால் இந்த குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. அவரை சந்தித்து பேசும்போது டப்பிங் பேசுவது பற்றி இறுதி செய்யப்படும்’