கணனியில் தங்கும் தற்காலிக கோப்புக்கள் மற்றும் தேவையற்ற கோப்புக்களை நீக்கி அதன் வேகத்தை அதிகரிப்பதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன.
இதேவேளை கிளவுட் முறை எனப்படும் ஒன்லைன் மூலமும் இவ்வாறான சேவைகளைத் தரும் அப்பிளிக்கேஷன்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
இவற்றின் வரிசையில் Piriform எனும் நிறுவனமானது தற்போது Agomo எனப்படும் அப்பிளக்கேஷனை உருவாக்கியுள்ளது.
கிளவுட் முறை மூலம் கணனியில் காணப்படும் தேவையற்ற மற்றும் தற்காலிக கோப்புக்களை நீக்கி அதன் வேகத்தை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது.
இந்த அப்பிளிக்கேஷன் இணைய உலாவி மூலம் உங்கள் கணனியை தொடர்ந்து கண்காணித்த வண்ணம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.