சமீபத்திய மாகாண நபைத் தேர்தல்களில் தான் ஐந்து ஆசனங்களைப் பெற்று 3 வது பெரிய கட்சியாக வந்து விட்டதாக முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேக்கா கூறினாலும், தேர்தல் முடிவுகளை நுணுகி ஆராய்ந்து பார்த்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரண்டாவது பலமான கட்சியாக பரிணமித்திருப்பதைக் காண முடியும் என்று ஜனநாயகக் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் டாக்டர் மகேஷ் அத்தபத்து கூறுகிறார்.
உண்மையில், இந்த தேர்தலில் போட்டி இருந்தது ஜனாதிபதிக்கும் எதிர்கட்சித் தலைவருக்கும் இடையிலும், ஜே.வி.பி சோமவன்ச அமரதுங்காவுக்கும் சரத்பொன்சேகாவுக்கும் இடையிலும்தான்.
சரத் பொன்சேக்கா ஐந்து இடங்களைப் பெற்றது ஜேஆரின் விருப்பு வாக்கு முறையில்தான் என்று அத்தபத்து மேலும் கூறினார்.