நாட்டில் நடைமுறையில் உள்ள எந்த சட்டத்திலும் மாற்றம் கொண்டுவர எமது அரசாங்கத்தால் முடியும்-கெஹெ­லிய ரம்­புக்­வெல

அர­சி­ய­ல­மைப்பின் 13 ஆவது திருத்தச்சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்ளும் நோக்கில் அவ­சரசட்­ட­மூலம் ஒன்றை கொண்­டு­வ­ரு­வ­தற்­கான ஜன­நா­யக கதவு மூடப்­ப­ட­வில்லை எனவே தேவைப்­படின் இதற்­கான நடவடிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்­கான சாத்­தியம் உள்­ளது என்று அர­சாங்கம் தெரி­வித்­துள்­ளது.

எனினும் தற்­போ­தைய சூழலில் பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவின் ஊடா­கவே அரசியலமைப்பு திருத்­தங்­களை செய்­வ­தற்­கான முயற்­சி­களை முன்­னெ­டுத்­துள்ளோம் என்று தகவல் வெளியிட்ட ஊட­கத்­துறை அமைச்சர் கெஹெ­லிய ரம்­புக்­வெல கூறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஒரு விட­யத்தை தெளி­வாக அனை­வரும் புரிந்­து­கொள்­ள­வேண்டும் அதா­வது அர­சி­ய­ல­மைப்பின் 13 ஆவது திருத்தச் சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்ளும் நோக்கில் அவ­சர சட்­ட­மூலம் ஒன்றை கொண்டுவருவ­தற்­கான ஜன­நா­யக கதவு மூடப்­ப­ட­வில்லை தேவைப்­படின் இதற்­கான நட­வ­டிக்­கை­களை முன்னெடுப்­ப­தற்­கான இய­லுமை உள்­ளது ஏன் எனில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி அர­சாங்­கத்திற்கு தற்போது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை பலத்­துடன் செயற்­பட்­டு­வரும் அர­சாங்­க­மாகும்.

எனவே, 13 ஆவது திருத்தச் சட்­டத்தில் திருத்தம் ஒன்றை மேற்­கொள்ள வேண்­டிய தேவை ஏற்­படின் அதனை எம்மால் செய்ய முடியும் அதற்­கான ஜனநாயக கதவு மூடப்படவில்லை என்பதனை தெளிவாக குறிப்பிடவேண்டும் எனக்குறிப்பிட்டார்.

அதுமட்டுமல்லாது நாட்டில் நடைமுறையில் உள்ள் எந்தவொரு சட்டத்திலும் திருத்தம் ஒன்றை கொண்டுவருவதற்கு ஜனநாயகரீதியான உரிமையும் இயலுமையும் அரசாங்கத்துக்கு உள்ளது என்பதனை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும் என தகவல் வெளி­யிட்ட ஊட­கத்­துறை அமைச்சர் கெஹெ­லிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார்.