அரசாங்கத்துடன் சேரவுள்ள தெற்கின் முக்கியஸ்தர் கயன்த....?

நடைபெறவுள்ள தென் மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஆளும் கட்சியுடன் இணைந்துகொள்ளவுள்ள ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் நீங்கள்தானா? என பொதுமக்கள் என்னிடம் வினவுகின்றனர் என காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கயன்த கருணாதிலக்க குறிப்பிடுகிறார்.

அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஆளும் கட்சியுடன் இணைந்தவர் தயாசிரி ஜயசேக்கர. அவருக்குப் பின்னர் நானும் ஆளும் கட்சியினருடன் சேரவுள்ளதாக வாய்வாழிப் பேச்சு பரவி வருவதாகக் குறிப்பிடும் அவர், தான் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டும் ஒருபோதும் விலகிச் செல்லப் போவதில்லை எனக் குறிப்பிடும்போது, 'தயாசிரியும் அவ்வாறுதான் ஆரம்பத்தில் கூறினார்' என பொதுமக்கள் தன்னிடம் குறிப்பிடுவதாக கயன்த குறிப்பிடுகிறார்.

இந்த வாய்வழிப் பேச்சுக்களுக்கெல்லாம் ஒரு முடிச்சுப்போட வேண்டுமென்றால், தான் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகாதிருக்க வேண்டும் எனவும் அவர் தொடர்ந்து குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)