கிழக்கிற்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தேவை... முஸ்லிம் காங்கிரஸின் பிரேரணை அதிக வாக்குகளால் வெற்றி!

13 ஆவது திருத்தச் சட்டத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் உட்பட அனைத்து அதிகாரங்களையும் கிழக்கு மாகாண சபைக்குத் தர வேண்டும் என்ற பிரேரணை அதிக வாக்குகளால் வெற்றியீட்டி மாகாண சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாணக் குழுவின் தலைவர் ஏ.எம். ஜெலீல் முன்வைத்த பிரேரணைக்கு ஆயிரம் பேர் விருப்புத் தெரிவித்திருக்கின்றனர்.

பிரேரணை முன்வைக்கப்பட்ட போது, கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் அதற்கு எதிராக குரல் எழுப்பிய போதும், பிரேரணைக்கு ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த மந்திரியொருவரும் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவரும் அக்கூற்றுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.
எப்)