வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சரின் இறுதிச் சடங்கில் கலகம்! இறுதிச் சடங்கு ஒரு மணிநேரம் தாமதம்!

30 ம் திகதி இடம் பெற்ற முன்னாள் வடமத்திய மாகாண முதல்லமைச்சர் பேர்ட்டி பிரேம்லால் திசநாயக்காவின் இறுதிச் சடங்கில், அமைச்சர் எஸ். எம். சந்திரசேன மற்றும் அவரது சகோதரரான தற்போதைய முதலமைச்சரை கல ந்து கொள்ளவிடாது திசாநாக்காவின் ஆதரவாளர்கள் கல கம் விளைவித்ததால் இறுதிச் சடங்கு ஒரு மணிநேர த்துக்குமேல் தாமதமாகியது.

திசநாயக்காவின் ஆதரவாளர்கள் ஜனாதிபதி மற்றும் அமைச்சர் பசில் ராஜப க்ஷவுக்கு எதிராகவும் அவர்கள் திசாநாயக்காவை தோற்கடிப்பதற்கு ஆதரவளித் ததாக கோசமெழுப்பினர்.

சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினராக திசாநாயக்க இருந்த போதும் அமைச்சர்கள் பலர் இறுதி மரியாதை செலுத்த வரவில்லை. பிரதமர் தி.மு. வருகை தந்திருந்தார். அனுராதபுரம் ஹரிச்சந்திர திடலில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.