அக்கரைப்பற்று மாநகர சபைக்கான புதிய கட்டிடத் தொகுதி திறந்து வைப்பு!

உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் 110 மில்லியன் செலவில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட அக்கரைப்பற்று மாநகர சபைக்கான கட்டிடத் தொகுதியினை திறந்து வைக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை மாலை மாநகர முதல்வர் அதாஉல்லா அஹமட் ஸக்கி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.அதாஉல்லாவும் மற்றும் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் மாநகர முதல்வர் பிரதி முதல்வர் அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.அதாஉல்லா நினைவுப் படிவத்தைத் திரைநீக்கம் செய்து வைத்ததுடன் அஸ்ஷேய்க் அஸ்ஸெய்யித் மக்கத்தார் ஏ மஜீத் நவீன மாநகர கட்டிடத் தொகுதியினை நாடாவை வெட்டித் திறந்து வைத்தார்