கிளிநொச்சிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலில் பயணித்த பொகவந்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பயணிகளுக்கு மயக்க மருந்து அளித்து, பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
இக் கொள்ளைச் சம்பவத்தில் தங்க ஆபரணங்கள், செல்லிடப் பேசிகள் உள்ளிட்ட ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக்கொள்ளையில் ஈடுபட்டவர்கள் ரயிலில் ஒன்றாக பயணித்த நண்பர்களான இளைஞர்களே பணம் பொருட்களை அபகரித்துச் சென்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.