உணர்ச்சிக் கவிஞருக்கோர் உணர்வு பூர்வமான கடிதம்

அன்பான உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் ஜயா அவர்கட்கு ,

உங்களின் தமிழறிவில் கால்பங்கு கூடக் கிடையாத இந்த ஈழ மண்னில் வாழும் கடைத் தமிழனின் கனிவான வணக்கங்கள்.

மேடைதோறும் முழங்கி மேகக் கூட்டத்தையே கலக்கி மழையாகப் பொழிய வைத்த மாபெரும் கவிஞரல்லவோ தாங்கள்.

தமிழ் தான் என் மூச்சு , தமிழ் தான் என் பேச்சு என்று மூச்சுக்குக் மூச்சு கொட்டித் தீர்த்து எம் தானைத் தலைவர் , தனிப்பெரும் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால் வாழும் போதே மாமனிதர் பட்டம் பெற்ற மாண்புக்குரியவர் அல்லவா தாங்கள்.

ஜயா, உங்களுக்கு இக்கடிதத்தை எழுதத் தூண்டியது அண்மையில் நான் இணையத்தளத்தில் கண்ட உங்கள் சீற்றம் மிகு பேச்சுத்தான்.

என்னே அழகுத் தமிழ் , எத்தகைய எதுகை மோனைகள் அத்தனையையும் ஜயகோ ஒருவரைத் திட்டித் தீர்ப்பதற்குப் பயன் படுத்தி விட்வீர்களே ஜயா?

கடந்த முப்பதுவருடங்களுக்கு மேலாக அதுவும் நான் பிறப்பதற்கு 18 மாதங்களுக்கு முன்னிருந்தே போராட்டம் கண்ட எங்கள் இனம் அதன் தலைவிதியைத் தொலைத்து விட்டுத் தேடிக் கொண்டிருக்கும் ஒரு பொழுதினிலே அவர்களைத் தாலாட்டிக் கொஞ்சம் மகிழ்விக்க வேண்டிய உங்கள் இனிய தமிழ் இத்தனை வீணாகப் போய்விட்டதே எனும் ஏக்கம் என் நெஞ்சை வாட்டுகிறது ஜயா.

இதோ தமிழீழம் ! அதோ தமிழீழம் என 25 அகவைகளுக்கு மேலாக மயாஜாலம் காட்டி விட்டு அவரையே நம்பி இருந்த மக்களை நம்பிக்கை எனும் மலையுச்சி வரை அழைத்துச் சென்று அங்கிருந்து உயிர் பிழைக்க முடியாதவாறு தள்ளி விழுத்தி மாய்த்த தானைத் தலைவரிடம் பதில் கேட்க இயலாது ஏனெனில் அவரும் அந்த எமலோகம் ஏகி விட்டார்.

ஓ !

நீங்களும் அவர் இன்னமும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று எஞ்சியிருக்கும் மக்களை மிச்சமின்றிப் பலி கொடுக்க எத்தனிக்கும் கும்பலில் ஒருவரல்லவா ? மறந்து விட்டேன் ஜயா !

பாவம் உயிரோடிருக்கும் உங்களை மாமனிதனாக்கி கெளரவித்த அந்தத் தானைத் தலைவனின் மறைவிற்கு உங்கள் வசமிருந்த தங்கத் தமிழால் ஒரு அஞ்சலிக் கவி கூட தரமுடியாதவாறு உங்கள் பொய்மைக் குழப்பம் உங்கள் கைகளுக்கு விலங்கிட்டு விட்டதல்லவா ?
சரி அதுதான் போகட்டும் அந்த அரும் பெரும் தலைவனுக்கு உங்கள் கைகளால் அஞ்சலிக் கவிதை பெறும் அருகதை இல்லை என்றே எடுத்துக் கொள்கிறேன்.

" தமிழன் என்று சொல்லடா ! தலை நிமிர்ந்து நில்லடா " என்று உங்கள் தமிழ்த் திறனால் உசுப்பேறிய வாலிபர்கள் தங்கள் நிமிர்த்தப்பட்ட தலைகளை இலங்கை இராணுவத்திடமும், மேதகு தலைவரிடமும் பரிதவிக்க பறி கொடுத்துக் கொண்டிருக்க, வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தின் தலைநகரில் 30 வருடங்களாக உங்கள் தலையைத் தப்ப வைத்துக் கொண்டிருக்கும் ஒரு உயர் கவிஞன் அல்லவா தாங்கள் ?

அது மட்டுமா ? உங்களைப் போன்ற தமிழ் வெறியேற்றும் கூட்டத்தினரால் தம் நிலை மறந்து யாரோ பெற்ற பிள்ளைகள் தம்முயிரைப் பணயம் வைத்துப் போராடிக் கொண்டிருக்க உங்கள் வாரிசினை வெளிநாட்டில் நிம்மதியான வாழ்வை அனுபவிக்க அனுப்பி வைத்த மாமனிதரல்லவா ஜாயா நீங்கள் ?

யார் செய்த புண்ணியமோ மாபெரும் பேரழிவுக்குப் பின்னால் புயலுக்குப் பின்னால் வரும் அமைதியைப் போல ஈழ மண்ணில் வாழும் எமக்கு ஒரு சிறிய ஒளிக்கீற்ருத் தெரிகிறது போல ஒரு எண்ணம் தோன்றும் போது பாதுகாப்பான கவசத்திலிருந்து கொண்டு அவ்வொளிக்கீற்றையும் அடைக்க ஒரு ஓலையைத் தேடுகிறீர்களே ஜயா? இது நியாயமா?

புலி வாலைப் பிடித்துக் கொண்டு அதை விடவும் முடியாமல் அதில் சவாரி செய்யவும் முடியாமல் தவிக்கும் ஒருவனைப் போல தவித்துக் கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொஞ்சம் அறிவு கொண்டதே எனும் வகையில் நடந்து கொண்டது.

எமது நேச நாடான இந்தியா , தமது ஒரு ஒப்பற்ற தலைவனை மேதகு தலைவரின் அரசியல் சாணக்கியம் எனும் பெயரில் எடுத்த அரசியல் வங்குரோத்து நடவடிக்கையால் பலி கொடுத்தும் கூட தகுந்த அரசியல் ஆலோசனைகளின் மூலம் ஒரு தேர்தலை வடமகாணத்தில் நடத்தி முடித்திருக்கிறது.

அது மட்டுமின்றி வடமகாணத்தின் முதலாவது முதலமைச்சராக இதுவரை தன்மீது எதுவித அரசியல் சாயமும் பூசாத முன்னால் பிரதம நீதியரசர் சீ.வீ.விக்னேஸ்வரன் அவர்களை தெரிவு செய்யும் படியான வகையில் கூட்டமைப்பிற்கு அறிவுறுத்தியிருந்தது.

சிறிய அளவிலான ஒரு நிம்மதிப் பெருமூச்சை விட்ட எம் ஈழத் தமிழர்களின் வாழ்வில் மீண்டும் சூறாவளியைத் தோற்றுவிக்க தாங்களும், தங்களைச் சார்ந்தவர்களும் கங்கணம் கட்டிக் கொண்டு இயங்குவது எமது உள்ளத்தை ரணமாக்குகிறது ஜயா.

நேற்றுக் கொழும்பில் விளைந்து இன்று யாழ்ப்பாணத்தில் தளைத்தவர் என்று உங்களால் வருணிக்கப்பட்ட விக்னேஸ்வரன் ஈழம் எனும் நாட்டிற்குள் தானே வாழ்ந்திருக்கிறார். நாட்டில் நடக்கும் போரிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அவர் வேறு நாடு ஒன்றிலும் ஓடிப்போய் ஒளிந்து கொள்ளவில்லையே ! ஜயா.

தந்தை செல்வா , ஜீ.ஜீ. பொன்னம்பலம் போன்ற நீங்கள் பின்பற்றி வந்த தலைவர்கள் தமது தளமாக கொழும்பை வைத்து செயற்பட்ட காலங்களை நீங்கள் அறிந்திருக்கவில்லையா ? முப்பது வயது கூட நிரம்பாத எனக்குத் தெரிந்த வரலாறு தமிழீழம் எனும் கொள்கையில் விதையாக விழுந்து விருட்சமாக் வளர்ந்து நிற்கும் உங்களுக்கு தெரியாமலிருக்கும் என்பது கேலிக்கூத்தாகாதா ?

மூன்று தசாப்தங்களுக்கு மேலாக போராட்டம் எனும் பெயரில் சட்ட சீர்குலைவுகளுக்கள்ளாகி அடையாளத்தை இழந்து தவித்த எம் மக்கள் சிறிதளவுவாவது ஒரு நிலையான் வாழ்விற்குத் திரும்புவதை எதிர்ப்பதில் நீங்கள் காட்டும் தீவிரம் என்னைப் போன்றவர்களைத் திகைக்க வைக்கிறது.

எம்மண்னிலே வந்து சிறிது காலம் வாழ்ந்து பார்த்தீர்களானால் எம் இன்னல்களின் ஆழம் உங்களுப் புரியும். ஒரு கட்டுபாடற்ற கலாச்சாரச் சீர்குலைவ்வுக்குள்ளாகும் என்னைப் போன்ற இளளைஞர், யுவதிகளின் அவலம் புரியும்.

எதிர்ப்பரசியலினால் 30 வருடங்களுக்கு மேலாக எதையும் சாதிக்க முடியவில்லை இணக்க அரசியலுக்கு ஏன் சிறிது கால அவகாசம் கொடுக்கத் தயங்குகிறீர்கள் ?

ஜயா , ஒரு குழந்தை மிறந்து மண்னில் தவழும் முன்பாகவே அதற்கு நடக்க வராது, பேச வராது என்றெல்லாம் எதிர்மறையான கருத்துகளை வைத்தால் எப்படி அக்குழந்தையின் வளர்ச்சி ஆரோக்கியமானதாக இருக்கும் ?

அதைப் போன்றல்லவா ? இருக்கிறது உங்கள் வடமகாண சபையின் முதல்வர் மீதான காட்டம்.

விதவைப் பெண்களின் தவிப்பு ஒருபுறம் , சீர்குலைந்த கல்விக் கட்டமைப்பினால் எதிர்காலத்தைத் தொலைத்த என் போன்றவர்களின் அவலம் ஒருபுறம், நாகரீகம் என்பதன் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் கலாச்சார சீரழிவுக்குள்ளாகும் இளைஞர், யுவதிகள் இன்னொரு புறம். இவர்களின் வாழ்வைச் சீரமைக்க ஒரு சீரான கட்டமைப்புத் தேவை என்பதை உணராமல் உங்களைப் போன்றோர் சுயநலத்தை முன்வைத்து எமது மண்னின் அமைதியைச் சீர்குலைக்கும் நடவடிக்கையை இனியாவது நிறுத்துங்கள்.

புலம் பெயர்ந்தோரில் சிலர் மேதகுவின் மேதமையைச் சொல்லி தாம் முடக்கி வைத்திருக்கும் பணத்தின் எச்சங்களை உங்களைப் போன்றோரை நோக்கி வீசுவதனால் நீங்கள் போடும் இந்தக் காட்டுக்கூச்சல் உங்களுக்கு தமிழீழத்தைப் பெற்றுத் தரப்போவது இல்லை.
மாறாக எம் மண்ணில் எஞ்சியிருக்கும் என் போன்ற எச்ச சொச்சங்களாகிய தமிழர்களின் வாழ்வை முற்றாக அழிக்கும் செயலைத் தான் நீங்கள் அரங்கேற்றப் போகிறீர்கள்.

ஜயா உங்களைப் போன்றோரிடம் வெளிநாடு செல்ல வசதியில்லாமல் உள்நாட்டில் முடங்கி வாழ்க்கை கொஞ்சம் அமைதியடையாதா என ஏங்கும் என் போன்றோர் கேட்பதெல்லாம் சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள் என்பதுவே.

கிடைத்த இந்த தேர்தல் வெற்றியின் மூலம் ஓரளவு எம்மை நாமே பராமரிக்கும் வழிமுறைகள் கிடைக்குமா என்று ஒன்றுபட்ட நாட்டினுள் ஒரு நடுநிலையான தீர்வை எட்டுவதற்கு நீங்கள் வாழும் பாதுகாப்பான பாரத பூமி போன்ற நேசநாடுகளுக்கு சந்தர்ப்பம் அளியுங்கள் என்பதுவே.

உங்களது உடல்நலக் குறைவைப் பற்றி அறிந்திருக்கிறேன். தங்கத் தமிழ்க் கவி உங்களினது உடல்நலனிற்காக எல்லம் வல்ல அந்தாஅண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

ஈழத்திலிருந்து
வாழத் துடிக்கும் ஈழத் தமிழன்
நல்லையா குலத்துங்க்கன்

தென் மாகாண முதலமைச்சர் வேட்பாளராவதற்கு தயாராகின்றார் மங்கள!

எதிர்வரவுள்ள தென் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் தென் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக நிற்பதற்கு மங்கள சமரவீர தயாராகவிருப்பதாக அக்கட்சியின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குறிப்பிடுகிறார்.

முதலமைச்சர் வேட்பாளராக நிற்குமாறு கட்சியிலிருந்து அறிவித்தல் வந்தால் பாராளுமன்றத்திலிருந்து விலகி, மாகாண சபைக்காக போட்டியிடுவதற்கு தான் தயாராகவிருப்பதாகவும், அது சற்று அவதானம்மிக்க செயலாகவிருந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் நன்மையைக் கருத்திற்கொண்டு தீர்மானத்திற்கு வரவும் தான் தயார் என்றும், அதற்கு ஒருபோதும் இணங்காமல் இருக்க மாட்டேன் எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

எதுஎவ்வாறாயினும், அதன் பொருட்டு கட்சி உயர்மட்டத்திலிருந்தும், பிரதேச மட்டத்திலிருந்தும் இதுவரை தனக்கு அவ்வாறானதொரு கடிதம் வரவில்லை எனவும் பாராளமன்ற உறுப்பினர் குறிப்பிடுகிறார்.

மேற்கு, தெற்கு, ஊவா மாகாணங்களுக்கான தேர்தலில் தற்போது பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் முதலமைச்சருக்கான வேட்பாளர்களாக தேர்தலில் போட்டியிட்டால் கட்டாயம் அந்த மாகாண சபைகள் மூன்றும் ஐக்கிய தேசியக் கட்சியினால் வெற்றிகொள்ளக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

இத்தாலியில் படகு மூழ்கியதில் 62 பேர் உயிரிழப்பு மேலும் பலரை காணவில்லை!

தெற்கு இத்தாலி கடற்பரப்புக்கு அப்பால் சட்டவிரோத குடிவரவாளர்களை ஏற்றிச்சென்றுகொண்டிருந்த படகு ஒன்று இன்று மூழ்கியுள்ளதாக செய்திகள் தெரிவிப்பதுடன் இவர்களில் குறைந்தபட்சம் 62 பேர் உயிரிழந்துள்ளதுடன் 140 இற்கும் அதிகமானோர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இந்தப் படகில் 500 பேர் வரையில் இருந்துள்ளதாகவும் நம்பப்படுவதுடன் உயிரிழந்தவர்களில் ஒரு சிறுபிள்ளையும் கர்ப்பிணித் தாய் ஒருவரும் அடங்குவதுடன் படகு விபத்திற்குள்ளானபோது படகிலிருந்த பயணிகள் கடலினுள் பாய்ந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிப்பதுடன் இந்தப் படகு மூழ்குவதற்கு முன்னராக படகு தீ பிடித்து எரிந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் 14வயது மாணவியை பலாத்காரம் செய்த சீக்கியர் இந்தியாவில் கைது !

அமெரிக்காவில் சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு இந்தியாவுக்கு தப்பி வந்த சீக்கியரை அமெரிக்க பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தியாவை சேர்ந்தவர் அமித் சிங். அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு, மார்ச்11 ம் திகதி பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 14 வயது மாணவி ஒருவரை நைசாகப் பேசி, தன் வீட்டுக்கு அழைத்துச்சென்றார்.

அங்கு அந்த மாணவியை அவர் பலாத்காரம் செய்துவிட்டார். இது தொடர்பாக அந்த மாணவி, தனது வகுப்பு ஆசிரியையிடம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து பொலிசில் புகார் செய்து, வழக்கு பதிவானது. ஆனால் சம்பவம் நடந்த 5 நாளுக்குப்பின் அமித் சிங், இந்தியாவுக்கு தப்பி வந்து விட்டார்.

இந்த வழக்கில் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்வதற்கு அமித் சிங்கை இந்தியாவில் இருந்து நாடு கடத்திக்கொண்டு செல்ல அமெரிக்கா நடவடிக்கை எடுத்தது. அமெரிக்க பொலிசார் இந்தியா வந்து அமித் சிங்கை நியூயார்க் அழைத்துச் சென்றனர். அவர் உடனடியாக அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் அமித் சிங் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

(இ.மி)

பணத்திற்கு பதில் பாலியல்; மட்டக்களப்பில் அரங்கேறும் சம்பவங்கள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுய தொழிலுக்காக நுண்கடன்களை வழங்கும் நிதி நிறுவனங்களின் சில அதிகாரிகள் கடனை செலுத்த தாமதிக்கும் பெண்களிடம் பாலியல் ரீதியாக நடந்து கொள்ள முற்படுவதாக உள்ளுர் தன்னார்வ தொண்டர் அமைப்புகளின் ஓன்றியமான இணையம் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறது.

சுய தொழிலுக்காக நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள், கடனை வழங்கிவிட்டு கடனை செலுத்த தாமதிக்கும் பெண்களிடம் அந்த நிறுவன அதிகாரிகள் சிலர் பாலியல் ரீதியாக கடனுக்கு பதிலை தருமாறு கோருவதாக இணையத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள பெண்கள் அமைப்புகளினால் இது தொடர்பாக தமது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக இணையத்தின் தலைவரான வி.கமலதாஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள் குடியேற்றப் பிரதேசங்களிலும் பின் தங்கிய கிராமங்களிலுமே இந்த நிலை காணப்படுவதாகவும் போருக்கு பின்னரே மாவட்டத்தில் அரச மற்றும் தனியார் வங்கிகள் உட்பட நிதி நிறுவனங்களும் அதிகரித்துள்ளதுடன் முப்பதுக்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்கள் தற்போது செயல்படுகின்றன.

தமது இணையத்தில் அங்கத்துவம் பெறும் 17 அமைப்புகளுக்கு மட்டும் தங்களால் 2 கோடி ரூபாய் நுண்கடன் வழங்கப்பட்டுள்ளதாக கூறும் அவர், குறித்த நிதி நிறுவனங்களினால் ஆகக்குறைந்தது 60 கோடி ருபாய் வரை வழங்கப்பட்டிருக்கலாம் என்றும் குறிப்பிடடார்.

இவ்வாறான நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் லீசிங் நிறுவனங்கள் பெண்களுக்கு சுய தொழிலுக்காக கடன்களை அதிக வீத வட்டிக்கு வழங்கி சில அதிகாரிகளினால் கொடுக்கப்படும் நெருக்கடிகளினால் குடும்பத்திலும் பிரச்சினைகள் ஏற்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பாக எதிர்வரும் திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அரசாங்க அதிபர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு இந்த பிரச்சனை கொண்டு வரப்படும் என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

இவரது இந்த புகார்கள் குறித்து அரசாங்க அதிபரை தொடர்பு கொண்டு கேட்ட போது இத்தகைய பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கான விசேட கூட்டமொன்ற கூட்டுவதற்கு இலங்கை மத்திய வங்கியுடன் தான் தொடர்பு கொண்டுள்ளதாக அரசாங்க அதிபர் பி. எம். எஸ். சார்ள்ஸ் பதில் அளித்தார்.

(பிபிசி)

திஸ்ஸவின் இராஜினாமாக் கடிதத்தை ஏற்றார் ரணில்!

குண்டசாலை ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் பதவியிலிருந்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க விலகிக் கொள்வது பற்றிக் சமர்ப்பித்துள்ள இராஜினாமாக் கடிதத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக் கொண்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாத்திலக்க இதுபற்றிக் குறிப்பிடும்போது, தற்போது வெற்றிடமாகியுள்ள இடத்திற்கு வெகுவிரைவில் அமைப்பாளர் ஒருவர் நியமிக்கப்படுவார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமைப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்தாலும், திஸ்ஸ அத்தநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராகவும், பொதுச் செயலாளராகவும் தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியில் இருப்பார் என்றும் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

அதிவேகப் படகில் ராமேஸ்வரம் வந்த ஈழத் தமிழரால் பரபரப்பு!

இலங்கையில் இருந்து தீவிரவாதிகள் கடல்வழியே ஊடுருவி தமிழகத்தில் தாக்குதல் நடத்தக் கூடும் என்று அண்மையில் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து கடற்பரப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த கடும் பாதுகாப்பை மீறி ராமேஸ்வரம் அருகே அதிவேகப் படகில் சென்று இறங்கிய ஈழத் தமிழர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது அதிவேகப் படகு ஒன்றில் ராமேஸ்வரம் அருகே மர்ம நபர் ஒருவர் சென்றிறங்கியதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து அப்பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது அங்கு பதுங்கியிருந்த இலங்கை மன்னார் - பேசாளையைச் சேர்ந்த செல்லகிருஷ்ணன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தாம் திருச்சியில் தங்கியிருப்பதாகவும் அடிக்கடி இலங்கைக்கு கடல்வழியே படகில் சென்று வந்ததாகவும் தெரிவித்துள்ளார் இதனையடுத்து கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் கடற்படைக்கும் கூட தெரியாமல் அதிவேகப் படகு ஊடுருவியது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.