வீட்டிலேயே சிலை விழுந்து வணங்கும் நடிகை

தற்போது ஸ்ரீகாந்துடன் பாகன் என்ற படத்தில் நடித்து வருகிறார் ஜனனி அய்யர். அவன் இவன் படத்தில் அறிமுகமாகியிருந்த ஜனனிக்கு அடுத்த படம் கிடைக்க இத்தனை மாதங்கள் ஆகியிருக்கிறது. அதற்கு காரணம் என்னவென்று ஜனனியிடம் கேட்டால், கதை அமையணும்ல என்பார். ஆனால் நிஜக்காரணம் அதுவல்ல. தனது நிலைமை புரியாமல் அவர் கேட்ட சம்பளம்தான்.
ஒரு வழியாக இதையெல்லாம் அவர் உணர சுமார் ஆறு மாதங்கள் ஆகிவிட்டது Janani Iyerஎன்று வைங்களேன்... நாம் சொல்லப்போவது அவரது பக்தி பற்றி. மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு வாரம் தவறாமல் போய்விடுகிற பக்தை இவர். முன்பெல்லாம் இவர் போகும்போது ஃபிகரு சூப்பராயிருக்கே என்று ஒரு லுக் விட்டுவிட்டு அகன்று விடும் இளசுகள் கூட்டம், இப்போது உள்ளே போனால் ஒரு ஆட்டோகிராஃப் என்று பேப்பரை நீட்டுகிறார்களாம்.
இறைவனின் சன்னதியில் அவன் மட்டுமே பெரியவன். அங்கு போய் ஆட்டோகிராஃப் போட்டுக் கொண்டிருந்தால், இருக்கிற பிழைப்பும் பிரச்சனைதான் என்றெல்லாம் யோசித்த ஜனனி முன்பு போல் இப்போது கோவிலுக்கு போவதில்லை.
அப்புறம் எப்படி? மைலாப்பூர் கபாலீஸ்வரர் சிலையை தனது வீட்டிலேயே வாங்கி வைத்திருக்கிறாராம். நேரம் தவறாமல் பூஜையும் நடக்கிறது.
ஹன்சிகா மோத்வானி, டாப்ஸி மாதிரி பெரிய அந்தஸ்த்தை கொடுங்க சாமியோவ்..