
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியா சென்ற 11 பேர் தாயகம் திரும்பியுள்ளனர்.
மட்டக்களப்பு, கல்லாறு, வாழைச்சேனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 11 பேரே கடந்த வெள்ளிக்கிழமை, தாயகம் திரும்பியுள்ளனர்.
சர்வதேச புலம்பெயர்ந்தவர்களுக்கான அமைப்பு ஊடாக தாங்கள் நாடு திரும்பியதாக, 11 பேரினுள் ஒருவர் தெரிவித்தார்.
ஒன்றரை வருடங்களாக அவுஸ்திரேலியாவில் தான் தங்கியிருந்த போது, தொழில் புரியவும் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.
தங்களது புகலிடக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும் என்பது தொடர்பில் நம்பிக்கையீனம் ஏற்பட்டதைத் தொடர்ந்து தாயகம் திரும்புவதற்கு முடிவு எடுத்ததாகவும் அவர் கூறினார்.
அநேகமாக இலங்கையர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் சுயவிருப்பத்தின் பேரில் நாடு திரும்ப வேண்டும். தாயகத்திற்கு திருப்பி அனுப்பும் நிலையே தற்போது அங்கு காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.