எதிர்வரும் வடக்கு, வடமேற்கு மற்றும் மத்திய மாகாண சபை தேர்தல்களுக்காக 40 ஆயிரம் அரச ஊழியர்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொகமட் தெரிவித்துள்ளார்.
இதுதவிர, வாக்களிப்பு நிலையங்களில் 7 ஆயிரம் காவல்துறையினர் காவல் கடமையில் ஈடுபடுத்தப்படுவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தேர்தல்கள் இடம்பெறும் மாகாணங்களில் விசேட காவல்துறை குழுக்கள் தொடர்ச்சியான ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவர் எனவும் பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொகமட் தெரிவித்துள்ளார்.