இலங்கையில் புகைத்தல் காரணமாக நாள் ஒன்றுக்கு 54 பேர் பலி



இலங்கையில் புகைத்தல் காரணமாக ஒரு நாளில் மட்டும் 54 பேர் மரணமடைவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறாக வருடம் ஒன்றிற்கு 20,000 பேர் வரையானோர் உயிரிழப்பதாகவும் அவ் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. புகைத்தலுக்காக இலங்கை பிரஜைகள் நாள் ஒன்றுக்கு 210 மில்லியன் ரூபாவை செலவிடுகின்றனர். புகைத்தலினால் ஏற்படும் நோய்களுக்கு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்காக 12,000 மில்லியன் ரூபா செலவிடப்படுவதாகவும் அவ் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை 8 வகையான புற்றுநோய் மற்றும் கண் பார்வை கோளாறு என்பன புகைத்தலினால் ஏற்படுவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.