
இந்திய மற்றும் சர்வதேச வங்கிகள் சிலவற்றின் பெயர்களைப் பயன்படுத்தி, போலியாக தயாரிக்கப்பட்ட சுமார் 50 கடனட்டைகள் சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
சந்தேகநபர்கள் சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய பகுதிகளிலுள்ள விற்பனை நிலையங்களில் இந்த கடனட்டைகளை பயன்படுத்தி பண மோசடி செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
ஐம்பது மற்றும் முப்பது வயதான இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மோசடியில் மேலும் இருவர் தொடர்புபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.