எழிலன் என்கிற சசிதரன் குறித்த ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க உத்தரவு.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் திருகோணமலை மாவட்ட அரசியற்துறை பொறுப்பாளர் எழிலன் என்கிற சசிதரன் உள்ளிட்ட ஐந்து பேர் குறித்த ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணையை முன்னெடுக்குமாறு
வவுனியா மேல் நீதிமன்றம், முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்துக்கு இன்று வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.
வன்னி இறுதி மோதல்களின் இறுதி நாளான மே 18, 2009 அன்று இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழியை அடுத்து எழிலனும் இன்னும் பெரும் எண்ணிக்கையான முன்னாள் புலி உறுப்பினர்களும் இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். அது பல்லாயிரக்காணக்கான மக்கள் முன்னிலையே இடம்பெற்றதாகவும், ஆனாலும், அவர்கள் யாரும் இன்னமும் வீடு திரும்பவில்லை என்று வழக்கு தொடுத்துள்ள உறவினர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, இராணுவத்தினர் எழிலன் உள்ளிட்ட பெருந்தொகையானவர்களை பொறுப்பேற்று 4 வருடங்களாகிவிட்ட போதிலும் அவர்கள் குறித்த எந்தவித விபரங்களையும் இன்னமும் வழங்கவில்லை. அவர்கள் மீது இலங்கை பாதுகாப்பு தரப்பினர் வழக்குகள் தொடுத்திருந்தால் அது தொடர்பில் அறிவித்து, விசாரணைகளின் பின்னர் விடுவிக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் உறவினர்களினால் வழக்கு விசாரணைகளின் போது முன்வைக்கப்பட்டுள்ளது.
எழிலன் உள்ளிட்டவர்கள் மீதான ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணைகளில் மிகுந்த கால தாமதத்தின் பின்னர் இராணுவத்தினார் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில், குறித்த மனுவிலுள்ள யாரும் தங்களிடம் சரணடையவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
எனினும், பிரதிவாதிகளை (இராணுவத்தினர் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர்) விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று வழக்கு தொடுப்பாளர்கள் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி ரட்னவேல் மேல் நீதிமன்றத்தில் கோரினார். இதனையடுத்து, குறித்த வழக்கு மீதான விசாரணைகளை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் முன்னெடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.