கோயில்கள், மற்றும் தலைவர்களுக்கு பண மாலை போடுவதை தவிர்க்க வேண்டும்!:

கோயில்கள், மற்றும் தலைவர்களுக்கு பண மாலை போடுவதை தவிர்க்க வேண்டும்!: மத்திய ரிசர்வ் வங்கி

கோயில்களில் சுவாமிகளுக்கு, அரசியல் தலைவர்களுக்கு  மற்றும் மதத் தலைவர்களுக்கு என பணமாலை போடுவதை அனைத்து தரப்பினரும் நிறுத்த வேண்டும் என்று, மத்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

நமது சமுதாயத்தில் பணம் என்பது இறையாண்மை உணர்த்தும் ஒரு அம்சமாக இருப்பதால், அரசியல் தலைவர்களுக்கு, கோயில்களில் சுவாமிகளுக்கு என்று பண மாலை போடுவது என்பது பணத்தை அவமதிப்பது போல உள்ளது.  மேலும் இதனால், நாட்டில் பணப்புழக்கம் குறையவும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது. எனவே, இத்தகைய நடவடிக்கைகளை அனைத்து தரப்பினரும் நிறுத்திக் கொள்ள முன்வரவேண்டும் என்று மத்திய ரிசர்வ் வங்கி கோரிக்கை வைத்துள்ளது.  கூடிய விரைவில் மத்திய அரசு இதை சட்டமாகவும் அமல்படுத்த வாய்ப்புக்கள் உள்ளதாகவும் தெரிய வருகிறது.