சிரிய அழுத்தத்துக்கு மத்தியில் ஈரானுக்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகளை விற்கும் ரஷ்யா.
சிரிய விவகாரம் உலகளாவிய ரீதியில் சூடு பிடித்து வரும் நிலையில் ரஷ்யா அதிநவீன S-300 விமான எதிர்ப்பு ஏவுகணைகளை ஈரானுக்கு விற்பதற்கும் ஈரானின் புஷெஹ்ர் அணுவாயுத உற்பத்திப் பகுதிக்கு அண்மையில் புதிதாக ஒரு அணு உலையைக் கட்டுவதற்கும் உதவ சம்மதித்திருப்பதாக ரஷ்ய பத்திரிகையான கொம்மெர்சான்ட் டெய்லி செய்தி வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொம்மெர்சான்ட் பத்திரிகையில் மேலும் தெரிவித்திருப்பதாவது: விமான எதிர்ப்பு ஏவுகணை விற்பனை மற்றும் அணு உலை கட்டிக் கொடுப்பதற்கான ஒப்பந்த விவகாரங்கள் வெள்ளிக்கிழமை டெஹ்ரானுக்கு விஜயம் செய்யவுள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினால் கலந்துரையாடப் படும். மேலும் புட்டின் ஈரானின் முக்கிய உயர் மட்ட அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளதுடன் ஈரானின் புதிய அதிபராகத் தேர்வு செய்யப் பட்ட ஹஸ்ஸன் ரோஹானியையும் சந்திக்கவுள்ளார்.
புதன்கிழமை ரஷ்ய பாராளுமன்றத்தில் சிரிய விவகாரம் குறித்த விவாதம் இடம்பெற்றது. இதில் பாராளுமன்றத்தின் கீழுள்ள வெளியுறவுத் துறையின் பிரதான அதிகாரியான அலெக்ஸி புஷ்கோவ் கருத்துத் தெரிவிக்கையில், சிரியா மீது வாஷிங்டன் போர் தொடுக்கும் சாத்தியம் இருப்பதாலே ரஷ்யா ஈரானுக்கான தனது ஆயுத விற்பனையை விரிவு படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் இது தொடர்பில் ஆப்கான் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஏற்கனவே நன்கு அனுபவம் உள்ளது என்றும் கூறியுள்ளார்.
இதேவேளை ஈரானின் ஆன்மிகத் தலைவர் ஆயதொல்லா அலி கொமேனி ஊடகங்களுக்குப் பேட்டியளிக்கும் போது, சிரியாவில் இரசாயன ஆயுதங்கள் பரவ விடாமல் தவிர்ப்பது என்ற அமெரிக்காவின் எண்ணம் நியாயமானது என்ற போதும் ஊடகங்களுடன் விளையாடும் வார்த்தை யுத்தத்தை தவிர்ப்பது நல்லது. சியோனிஸ்ட்ஸ் (இஸ்ரேலியர்கள்) நண்மைக்காக பல வாரங்களாக சிரியா மீது யுத்த அச்சுறுத்தல் விடுப்பது உகந்ததல்ல என்று தெரிவித்திருந்தார்.