முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்திற்கு முன்னர் சிங்களவர்களின் டிப்பர் ரக ஊர்தி மோதியதில் படுகாயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக அனுராதபுரம் கொண்டு செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஒட்டிசுட்டானை சேர்ந்த குறிப்பிட்ட பாடசாலை மாணவன் முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்தில் சாதராணதரம் படித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் பாடசாலை முன்பாக வீதியினை கடக்க முற்பட்ட வேளை சிங்களவர்களின் டிப்பர் மோதிக் கொண்டதில் விபத்திற்குள்ளாகியுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த மாணவன் சிகிச்சசைக்காக வுவனியா மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிதிவெடி வெடித்ததில் கண்ணிவெடி மீட்பு பணியாளர் படுகாயம்
மிதிவெடி வெடித்ததில் ஹலோ ட்ரஸ்ட் நிறுவன கண்ணிவெடி மீட்பு பணியாளர் ஒருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முகமாலை பகுதியில் நேற்று திங்கட்கிழமை நண்பகல் இடம்பெற்ற இந்த வெடிப்புச் சம்பவத்தில் கிளிநொச்சி பகுதியைச் ’சேர்ந்த 36 வயதுடைய எல். இலங்கேஸ்வரி என்ற பணியாளரே படுகாயமடைந்துள்ளார்.
ஹலோ ட்ரஸ்ட் என்ற கண்ணிவெடி அகற்றும் நிறுவனப் பணியாளரான குறித்த இளம்பெண் முகமாலைப் பிரதேசத்தில் கண்ணிவெடி மீட்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையிலேயே மிதிவெடி ஒன்று தற்செயலாக வெடித்து படுகாயமடைந்துள்ளார்.