கொலவெறி இசையமைப்பாளர் அனிருத்தும், நடிகை ஆண்ட்ரியாவும், சில காலத்துக்கு முன், நட்புடன் இருந்தனர்.
அப்போது இருவரும் முத்தமிடுவது போன்ற, புகைப்படம் இணையத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அனிருத் தான், இதற்கு காரணமாக இருக்க வேண்டும் என்று ஆண்ட்ரியாவின் காதுகளில் இருந்து புகை வரத் தொடங்கியது. இதனால், அனிருத்துக்கு டூ விட்டு, விலகி இருந்தார்.
இந்த இடைவெளியில், தீவிரமாக மலையாள படங்களிலும் நடித்து வந்தார். ஆனாலும், ஆண்ட்ரியாவின் வசீகரமான குரல்வளத்தை, அனிருத்தால், மறக்க முடியவில்லை.
தான், இசையமைக்கும் அடுத்த படத்தில், ஆண்ட்ரியாவை பாட வைத்துள்ளார். அவரும், பழைய விஷயங்களை மறந்து விட்டு, அந்த பாடலை பாட சம்மதம் தெரிவித்தாராம்.
இதையடுத்து, ஆண்ட்ரியாவுக்கு தொடர்ச்சியாக பாடுவதற்கு வாய்ப்பு அளிக்க முடிவு செய்துள்ளாராம், அனிருத். நடிப்பை விட, பாடலுக்கே அதிக முக்கியத்துவம் தரும் ஆண்ட்ரியா, தொடர்ச்சியாக கிடைக்கும் வாய்ப்புகளால் சந்தோஷமடைந்து உள்ளாராம்.