இருதய நோயாளியைக் காப்பாற்ற சாரதியாக மாறினார் வைத்தியர்.

இருதய நோயாளியைக் காப்பாற்ற சாரதியாக மாறினார் வைத்தியர்

சாரதி இல்லாத போதிலும், கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவதற்காக வைத்தியசாலை உயரதிகாரி ஒருவர் அம்பியூலன்ஸ் வாகனத்தை செலுத்த நேரிட்ட சம்பவம் அம்பலங்கொடையில் பதிவாகியுள்ளது.

அம்லங்கொடை வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி பிரசன்ன விஜேசிங்க என்பவரே நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவதற்காக இந்த மனிதநேய செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.

இருதய நோயால் பீடிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவரை அவசர சிகிச்சைக்காக உடனடியாக பலப்பிட்டிய வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு நேற்று மாலை வைத்தியர்கள் தீர்மானித்துள்ளனர்.

இதன்போது வைத்தியசாலையில் அம்பியூலன்ஸ் வாகனம் இருந்த போதிலும் அதன் சாரதி அங்கிருக்காத காரணத்தினால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இருதய நோயாளரை தொடர்ந்தும் வைத்தியசாலையில் வைத்திருப்பது அவரின் உயிருக்கு அச்சுறுத்தலாகும் என்பதை உணர்ந்த வைத்திய அதிகாரி பிரசன்ன விஜேசிங்க, நோயாளரை ஏற்றிக்கொண்டு அம்பியூலன்ஸ் வாகனத்தை பலப்பிட்டி வைத்தியசாலைக்கு செலுத்தியுள்ளார்.

வைத்தியரின் இந்த மனிதநேய செயற்பாட்டினால் நோயாளரின் உயிரைக் காப்பாற்ற முடிந்துள்ளாக தெரிவிக்கப்படுகின்றது.