எட்டு பிரதேசங்களில் நாளாந்தம் 2 மணித்தியால மின்வெட்டு
மேல் மாகாணத்தின் எட்டு பிரதேசங்களில் இன்றுமுதல் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை, நாளாந்தம் இரண்டு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
அதன் பிரகாரம் காலை 8.30 மணி முதல் இரவு 10.30 க்கு இடைப்பட்ட காலப்பகுதிக்குள், இரண்டு மணித்தியால மின்வெட்டு கட்டம் கட்டமாக அமுல்படுத்தப்படவுள்ளது.
அம்பலங்கொடை, ஹொரண, களுத்துறை, பண்டாரகம, ஸ்ரீஜயவர்தனபுர, ஹோமாகம, இரத்மலானை மற்றும் தெஹிவளை ஆகிய பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிவேக வீதியின் கடுவெலவை அண்மித்த பகுதிகளில் முன்னெடுக்கப்படும் நிர்மாணப் பணிகள் காரணமாக, பியகமவில் இருந்து பன்னிப்பிட்டி வரையான பிரதான மின் விநியோக மார்க்கத்தின் மின் விநியோகத்தை துண்டிக்க நேரிட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை குறிப்பிடுகின்றது.