
யாழ். கோண்டாவில் சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் தலை நசுங்கி ஸ்தலத்திலையே உயிரிழந்துள்ளார்.
பலாலி வீதியில் கோண்டாவில் சந்திக்கு அருகில் இன்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் காளிகோவிலடி, கொக்குவில் கிழக்கை சேர்ந்த ரவிக்குமார் பிரிட்மன் என்ற 24 வயதுடைய இளைஞனே மரணமடைந்துள்ளார்.
யாழ். நகரில் இருந்து தென்னிலங்கை சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு பலாலி வீதி வழியாக பலாலியை நோக்கி சென்று கொண்டிருந்த பஸ் கோண்டாவில் சந்திக்கருகில் வீதியோரமாக மோட்டார் சைக்கிளில் நின்ற இளைஞனை மோதியதில் இவ்விபத்து நேர்ந்துள்ளது.
மரணமடைந்த இளைஞன் குறித்த பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதால் பிரதேசவாசிகள் குறித்த பஸ்ஸை பொலிசார் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து செல்ல தடையாக இருந்தனர்