காலால் நடக்கும் அபூர்வ சுறா மீன்கள்

கடல் வாழ் உயிரினமான மீன்கள் பொதுவாகவே நீந்தும் வல்லமை கொண்டவை. இந்நிலையில் காலால் நடக்கும் அபூர்வ சுறா மீன்கள் இருப்பதை தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த அதிசய சுறா மீன்கள் இந்தோனேசியாவின் கிழக்கு கடலில் வாழ்கின்றன. உடலுக்கு அடியில் இருக்கும் சிறிய கால்கள் மூலம் இவை கடலின் தரையில் நடந்து செல்கிறது. இது அதிகபட்சம் 80 சென்டி மீட்டர்(2½ அடி) நீளம் மட்டுமே வளரக்கூடியது, மனிதனுக்கு தீங்கு விளைவிக்காத சாதுவான பிராணி என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.