தேர்தல் சட்டங்களை மீறுபவர்களை கைது செய்ய நடவடிக்கை

தேர்தல் சட்டங்களை மீறுபவர்களை கைது செய்ய நடவடிக்கை

வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் தேர்தல் சட்டங்களை மீறுபவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் பிரகாரம் தேர்தல்கள் ஆணையாளரினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகள் மற்றும் தேர்தல் கட்டளைச் சட்டத்தை மீறும் வகையில் செயற்படும் நபர்கள் கைது செய்யப்படவுள்ளனர்.

தேர்தல் சட்டங்களை மீறுகின்றவர்களை கைது செய்வதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று  ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண கூறியுள்ளார்.

சட்டவிரோத பதாகைகள், சுவரொட்டிகள், கட்டவுட்களை அகற்றுவதற்காக பொலிஸ் திணைக்களத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் சட்டங்களை மீறிய 101 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரை 123 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு பதிவாகியுள்ளன.

தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 81 பேர் கைது
தேர்தல் வன்முறைகள் மற்றும் சட்ட மீறல்கள் தொடர்பில் 78 பேர் கைது
தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 10 வாகனங்கள் கைபற்றல்; 97 பேர் கைது
தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 99 பேர் கைது
தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 101 பேர் கைது
தேர்தல் தொடர்பில் இதுவரை 309 முறைப்பாடுகள் - தேர்தல்கள் செயலகம்
தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 382 முறைப்பாடுகள்
தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 36 பேர் கைது.