வடக்கில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள தனியாருக்குச் சொந்தமான, அதே போல் காணி உறுதிகளற்ற காணிகளிலிருந்து முகாம்களை அகற்றி அதை அரச காணிகளில் அமைக்கும்படி ராவண பலய அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தே கந்த சத்தா திஸ்ஸ தேரர் தெரிவிக்கின்றார்.
வட மாகாணத்தில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் இதன்படி ஏனைய மாகாண முதலமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் இராணுவ முகாம்களை கடலில் தூக்கியெறிய முடியுமா என்றும் ராவணா பலய அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.