வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் தேர்திருவிழா இன்று காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகி தற்போது நிறைவடைந்துள்ளது. நாடெங்கிலும் இருந்து வந்த பல்லாயிரக் கணக்கான பக்தர்களின் அரோகரா கோசம் வானைப் பிளக்க நல்லூரான் தேரேறி வீதிவலம் வந்தார். மேலும் இலங்கை விமானப்படையின் ஹெலிகப்டர் வழமைபோன்று மலர் சொரிந்து சென்றது. ஏராளமான பக்தர்கள் தேருக்குப் பின்னால் அங்கப் பிரதட்டை செய்து தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்று வருகின்றனர்.
