ஐரோப்பிய நாடுகளில் சட்டவிரோதமாக குடிபுக விரும்புகிறவர்கள் இத்தாலி கடல் வழியாக அங்கு பயணம் மேற்கொள்கின்றனர் இதில் அதிகம் ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் வறுமை, உள்நாட்டு சண்டை காரணமாக மக்கள் திருட்டுத்தனமாக குடிபெயர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இத்தாலி நாட்டின் தெற்குப்பகுதியில் உள்ள 'லாம்பெடுசா' கடல் பகுதியூடாக சட்டவிரோதமாக குடிபுக படகில் பயணம் மேற்கொண்ட 500 பேர் சென்று கொண்டிருந்த படகு திடீரென படகு கவிழந்ததில் படகில் இருந்த 500 பேரும் கடல் நீரில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருப்பதாக அறிந்த இத்தாலி கடல் மீட்புக்குழுவினர் அங்கு தேடுதல் வேட்டையை தொடங்கி இதுவரை 140 பேரை காப்பாற்றியுள்ளதுடன் நீரில் மூழ்கி இறந்தவர்கள் 82 பேரின் உடல்களை வெளியே எடுத்துள்ளனர்
இன்னும் நூற்றுக்கணக்கானோர் கடலில் மூழ்கியிருப்பதால், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது படகு விபத்து ஏற்படுவதற்கு முன்பு தீப்பிடித்ததாக கூறப்படுகிறது இந்த வாரம் தொடக்கத்தில் சிசிலி தீவு அருகே இதுபோன்று சட்டவிரோதமாக குடிபுக முயன்றோரின் படகு கவிழ்ந்து 13 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.