அமெரிக்காவில் சிறைவைக்கப்பட்டுள்ள கியுபாவின் இராணுவ வீர்ர்கள் ஐவரையும் எங்களது இராணுவ வீர்ர்கள் எனக் கருதி, அவர்களை விடுதலை செய்வதற்காகச் செய்யும் யுத்தமும், எங்கள் நாட்டுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சூழ்ச்சிகளை முறியடிக்கும் யுத்தமும இரு வேறானவையல்ல, ஒரே யுத்த்த்தின் அத்தியாவசிய பிரிவாக நினைத்துச் செயற்படுமாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நிர்மாண பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொதுவசதிகள் அமைச்சர் விமல் வீவன்சவினால் இலங்கையரைச் சந்தித்து தெளிவுறுத்தப்பட்டுள்ளது.
தேசிய சுதந்திர முன்னணியுடன் இணைந்து இலங்கையிலுள்ள பொலிவேரிய சகோதரத்துவ அமைப்பும் ஏற்பாடு செய்திருந்த ‘அமெரிக்கப் பலவந்தமும் கியுபாவின் 5 எடுத்துக்காட்டுக்களும்’ எனும் தலைப்பில், அமெரிக்காவில் 15 ஆண்டுகளாக நியாயமற்ற முறையில் சிறைவைக்கப்பட்டுள்ள கியுப நாட்டைச் சேர்ந்த ஐவரையும் விடுதலை செய்யுமாறு கோரி இலங்கையிலுள்ள கியுபத் தூதுவர் திருமதி இந்திரா லோஜேஸ் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் விசேட உரை நிகழ்த்தும்போதே அமைச்சர் விமல் வீரவன்ச இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய விமல் வீரவன்ச,
‘பெலிவேரியா சகோதரத்துவ அமைப்பு இன்று செய்துகொண்டிருப்பது சர்வதேச ரீதியாக இந்நாட்டுப் பொதுமக்களுக்கு முன்வைக்கப்பட்டுள்ள பாரிய கடமைக்கும் பொறுப்புக்கும் உரம் சேர்க்கும் விடயமாகும். இலங்கையில் எங்களுக்கு சர்வதேசத்தின் பொறுப்புக்கள் பற்றி தெரிந்துகொள்வதற்கு கடினமாக இருக்காது. அதற்குக் காரணம் கியுபாவோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது, அவர்களைப் போன்று அவர்கள் முகங்கொடுத்தது போன்று இல்லாவிட்டாலும் மற்றொருமுறையில் கியுபாவை விடவும் அதிகமாக உலக பலம்மிக்க ஏகாதிபத்தியவாதிகளின் கைகளுக்குள் சிக்குண்டுண்டு கிடந்தமையாகும். அதற்கு எதிராக இலங்கையர்களான எங்களுக்குள் எழுகின்ற உணர்வுகள் கியுபா நாட்டினரின் உணர்வுகளைத் தெரிந்து கொள்வதற்கு எங்களுக்கு உதவுகின்றன.
கியுபா கடந்த பல தசாப்தங்களாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக பெரும் தைரியத்துடன் அழியாத பெருநம்பிக்கையுடன் தங்களது இருப்பையும் கொள்கைகளையும் விட்டுக்கொடுக்காதிருப்பதனாலேயே நாங்கள் கியுபா மீது அன்பு செலுத்துகிறோம். அதுமட்டுமன்றி, அந்நாடு கியுபாப் பொதுமக்களின் நம்பிக்கையையும், அன்பையும், கௌரவத்தையும் நாளுக்கு நாள் பெற்று உலகுக்கு மாபெரும் முன்மாதிரியைக் காட்டிவருகின்றது.
பலம்மிக்க அரசுகளின் தீமைகளுக்குக் கட்டுப்பட்டு கால்மடித்திருப்பது அழகியல் காட்சியாக மாறியுள்ள யுகத்தில், பலம்மிக்க அரசாங்கங்களின் அநியாயங்கள், கெட்ட விடயங்களுக்கு சோரம் போயுள்ள உலகில் கியுபாவிடமுள்ள சக்தியானது மிகப் பலம்பொருந்தியது. பாரிய பலத்திற்கு எடுத்துக்காட்டு. எனவேதான் ஏகாதிபத்தியவாதத்திற்கு எதிரானவர்களின் பெருவரவேற்பு அதற்குக் கிடைக்கிறது.
கியுபா மக்கள் கியுபாவின் கம்பியூனிஸ்ட் கட்சியுடன் மேற்கொண்டுவரும் பிரச்சினையானது கியுபாவுக்கு மட்டும் விசேடத் தன்மை வாய்ந்த பிரயத்தனம் அல்ல. கியுபா மக்கள் தேர்ந்தெடுத்த சமூக, பொருளாதார திட்டம் தொடர்பாக நாங்கள் ஒருவருக்கொருவர் உடன்பாட்டுடனும் உடன்பாடில்லாமலும் இருந்தாலும் நாங்கள அனைவரும் உடன்படும் ஒரு பொதுவான விடயம் இருக்கின்றது. அதுதான், கியுபா மக்களுக்கு சுயாதீன இனங்களுக்கு உள்ள உரிமையை தட்டிப் பறிக்க எந்தவொரு பலம் வாய்ந்த இனத்திற்கும் பலம் வாய்ந்தவர்களுக்கும் எந்தவொரு அதிகாரமும் இல்லை என்பது.
(நீளும்...)
(தமிழில்: கலைமகன் பைரூஸ்)