சர்வதேச இளைஞர் மாநாடு முதற்தடவையாக அடுத்த வருடம் இலங்கையில் நடைபெறவுள்ளது.
ஆசிய கண்டத்தில் முதற்தடவையாக சர்வதேச இளைஞர் மாநாடொன்றை நடத்துவதற்கான சந்தர்ப்பம் இலங்கைக்கு கிடைத்துள்ளதாக ஜனாதிபதி பேச்சாளர் மற்றும் சர்வதேச ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான கலந்துரையாடல் நியூயோர்க்கில் நேற்று நடைபெற்றுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, ஐ.நா செயலாளர் நாயகத்தின் இளைஞர் விவகாரங்களுக்கான பிரதிநிதி அஹமட் அல் ஹிந்தாவி உள்ளிட்ட இளைஞர் மாநாட்டுடன் தொடர்புடைய இளம் பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.
ஐக்கிய நாடுகளின் 68வது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் ஜனாதிபதி ஆற்றிய உரையில் இளைஞர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டிருந்ததை ஐ.நா பிரதிநிதிகள் குழுவிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு வரையான நாட்டின் அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளித்துள்ள இலங்கை, இளம் சந்ததியினரின் அபிலாஷைகளை சர்வதேச மட்டத்தில் ஊக்குவிப்பதற்கு முன்னின்று செயற்படுவதாக ஜனாதிபதி ஐ.நா பொதுச் சபையில் தெரிவித்திருந்தார்.