சிரியா விஷக்குண்டுகளை வீசி பொது மக்களை கொல்கிறது என்று குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து சிரியா மீது போர் தொடுக்க அமெரிக்கா தயாராகி வருகிறது. இதற்காக அமெரிக்க பாராளுமன்றத்தின் ஒப்புதலை பெறுவது குறித்து அதிபர் பராக் ஒபாமா ஆர்வம் காட்டி வருகிறார். சிரியாவின் மீது போர் தொடுப்பது தொடர்பாக ஆதரவு வேண்டி பிரதிநிதிகள் சபையின் தலைவர் ஜான்- போனர், குடியரசு மற்றும் ஜனநாயக கட்சித்தலைவர்களையும்...
நேற்று அழைத்து பேசினார். அப்போது சிரியா மீது போர்தொடுக்க வேண்டிய கட்டாயத்தை வலியுறுத்தி சபைகளில் ஆதரவளிக்க ஒபாமா வேண்டினார். பழமைவாத சிந்தனை கொண்ட குடியரசு கட்சித்தலைவர்கள் ஒபாமாவின் இந்த நடவடிக்கைக்கு அப்போது ஆழ்ந்த தயக்கம் காட்டினர். இருந்தும் பிரதிநிதிகள் சபையின் தலைவர் (John Boehner) ஜான்- போனர் ஆதரவு தெரிவித்துள்ளார். இது செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையில் ஒப்புதல்பெற உதவும் என்று கூறப்படுகிறது.
மேலும், செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையின் வெளிநாட்டு விவகாரங்களுக்கான கமிட்டிகள் முன்பு பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் ஆஜராகி போர் தொடுப்பதின் அவசியத்தை நியாயப்படுத்தி பேசுவார்கள் என்று கூறப்படுகிறது. சிரியா மீது போர் தொடுக்க ஜப்பான் பிரதமரிடம் ஆதரவு கோரிய அதிபர் பராக் ஒபாமா, 3 நாள் சுற்றுப்பயணமாக சுவீடன் மற்றும் ரஷ்ய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.