வடமாகாண விவசாயத்திணைக்களத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி வட்டக்கச்சி விவசாயப் பண்ணையில் மாபெரும் விவசாயக்கண்காட்சி நடைபெற்றுவருகின்றது.
நேற்றையதினம் (02) ஆரம்பமாகிய இக்கண்காட்சி தொடர்ந்து எதிர்வரும் வெள்ளிக்கழமை வரை நடைபெறவுள்ளது. விவசாய மாவட்டமான கிளிநொச்சியில் நீண்டகாலமாக விவவாயிகளுக்கு முறையான விவசாய செய்கை தொடர்பான விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகள் எவையும் நடைபெறாத நிலையில் விவசாயிகள் தொடர்ந்தும் நவீன விவசாய முறைகளைக் கையாளுவதிலும் உற்பத்திக்கேற்ற விளைச்சலை பெறுவதிலும் பின்னடைவுகளை எதிர்கொண்டு வருகின்றனர். இதனை நிவர்த்தி செய்யும் வகையில் வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் அனுசரணையுடன் கிளிநொச்சி மாவட்ட விவசாயத் திணைக்களத்தினால் இக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மாவட்டத்தின் காலநிலைக்கேற்ற பயிரிடக்கூடிய அனைத்து பயிரினங்களும் செய்கை பண்ணப்பட்டுள்ளதுடன். கால் நடைவளர்ப்பு நீர்ப்பாசண முறைகள் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளும் செய்கை மூலமாக விளக்கமிக்கப்பட்டுள்ளது.
இன்று இக்கண்காட்சியை பார்வையிடச் சென்ற ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் கண்காட்சி ஏற்பாட்டாளர்களுடன் கலந்துரையாடும்போது யுத்த பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள மாவட்ட விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டுக்கு இவ்வாறான செயற்பாடுகள் மிக அவசியமானதெனகுறிப்பிட்டதுடன்; இக்கண்காட்சியை ஏற்பாடுசெய்த விவசாயத்திணைக்களத்தினருக்கு மாவட்டமக்களின் சார்பாக நன்றிகளையும் தெரிவித்தார்.
இவ்விவசாயக்கண்காட்சியில் மாவட்ட தென்னை அபிவிருத்தி சபையின் பனை அபிவிருத்திசபையினர் கால்நடை அபிவிருத்தி மற்றும் உற்பத்தி திணைக்களத்தினர், நீர்ப்பாசணத் திணைக்களத்தினர், மருத்துவத்துறையினர் மற்றும் கமநல அபிவிருத்தி திணைக்களத்தினர் ஆகியோருடன் விவசாய மற்றும் கால்நடை உற்பத்தி செயற்பாடுகளுடன் தொடர்புடைய தனியார் நிறுவனங்கள் என வடமாகாணத்திற்குட்பட்ட மாவட்டங்களில் செயற்படும் அனைத்து துறைசார்ந்த செயற்பாட்டாளர்களும் தமது
செயற்பாடுகள் தொடர்பான செய்கைமுறைகளை விளக்கும் வகையில் காட்சிப்படுத்தியிருந்தனர்.
செயற்பாடுகள் தொடர்பான செய்கைமுறைகளை விளக்கும் வகையில் காட்சிப்படுத்தியிருந்தனர்.