நெற்சந்தைப்படுத்தும் சபை விசாயிகளிடம் இருந்து பெற்ற நெல்லுக்காக விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டியுள்ள ரூபா 300 மில்லியனை இந்த வெள்ளிக் கிழமைக்குள் கொடுத்து முடிக்க வேண்டும் என்று கூட்டுறவு மற்றும் உண்ணாட்டு வர்த்தக அமைச்சர் ஜோண்சன் பெர்ணான்டோ நேற்று (01 ம் திகதி) நெற்சந்தைப்படுத்தும் சபைத் தலைவரைப் பணித்துள்ளார். அமைச்சருக்கும் திறைசேரி அலுவலர்களுக்கும் இடையில் இடம் பெற்ற கலந்துரையாடலில் இந்த 300 மில்லியன் ரூபா பெற்றுக் கொள்ளப்பட்டதாக அமைச்சர் கூறயுள்ளார்.
இம்முறை 2900 மில்லியன் ரூபா பெறுமதியான 90000 தொன் நெல், நெல் சந்தைப்படுத்தும் சபையால் கொள்வனவு செய்யப்பட்டது. அதில் 300 மில்லியின் ரூபா விவசாயிகளுக்கு இன்னும் கொடுக்க வேண்டிருந்தது. அது இன்று முதல் வழங்கப்படும்.