நிவ்யோர்க் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று நாடு திரும்பினார்



ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நிவ்யோர்க் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று நாடு திரும்பியுள்ளார்.

இன்று அதிகாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். ஜனாதிபதி தனது நிவ்யோர்க் பயணத்தின் போது ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்திலும ;உரையாற்றியிருந்தார்.

அபிவிருத்தியடைந்த நாடுகள் , அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் மீது அழுத்தங்களை பிரயோகிப்பது தடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி தனது உரையின் போது குறிப்பிட்டிருந்தார்.

ஜனாதிபதியின் உரையை சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பலரும் பாராட்டியிருந்தனர். பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொண்ட பல நாடுகளின் அரச தலைவர்களையும் சந்தித்த ஜனாதிபதி இலங்கையுடனான நல்லுறவை கட்டியெழுப்புவது தொடர்பில் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் மற்றும் பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா ஆகியோரையும் ஜனாதிபதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இதன்போது இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பில் ஜனாதிபதி விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.