வாகனக் கடலாக மிதக்கும் ஹம்பாந்தோட்டை துறைமுகம்!

ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள மாகம்புர மஹிந்த ராஜபக்ஷ துறைமுகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் Transshipmentமுறை மூலம் ஆபிரிக்க நாடுகள் உட்பட பல நாடுகளுக்கு மீள ஏற்றிச்செல்வதற்காக மூவாயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் இறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறுது.

கடந்த வியாழக்கிழமை (26.09.2013) துறைமுகத்துக்கு வந்த Clover Ace எனும் வாகனக் கப்பல் ஒன்றிலிருந்து மூவாயிரத்து இருநூறுக்கும் அதிகமான வாகனங்கள் கடந்த மூன்று நான்கு தினங்களாக இறக்கும் வேலைகள் நடைபெற்றன.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களிலும் 95 சதவீத வாகனங்களும் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ துறைமுகத்திலையே இறக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.